கோட்டா கோ கம போராட்டச் செயற்பாட்டாளர் தனிஷ் அலி உள்ளிட்ட 21 பேர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோசப் ஸ்டாலின், முதலிகே, சோசலிச இளைஞர் அணித் தலைவர், அருட்தந்தை ஒருவர் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, டுபாய் செல்ல முயன்ற வேளை விமானத்துக்குள் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தனிஷ் அலி எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.