உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டுத் தொடரான, பொதுநலவாய விளையாட்டுப் போட்டித் தொடர் நேற்று (வியாழக்கிழமை) இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் கோலாகலமாக ஆரம்பமானது.
இந்த 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டித் தொடரில், மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.
இதுதவிர, நீண்ட இழுபறி மற்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், மகளிருக்கான ரி-20 கிரிக்கெட் போட்டிகள், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த தொடரில், பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, ஸ்கொட்லாந்து, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, மலேசியா, நைஜீரியா, ஜமைக்கா, கென்யா, உட்பட 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.