நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 55 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
மேலும் அனர்த்தங்களினால் 3 வீடுகள் முழுமையாகவும் 32 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.