நாட்டின் ஆறு மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது.
இன்று(வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்தறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இது 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு, சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.