புதிய அரசாங்கத்தை அமைக்க ராணியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
ஸ்கொட்லாந்து- அபெர்டீன்ஷையரில் உள்ள பால்மோரல் கோட்டையில், ராணியை இன்று (செவ்வாய்க்கிழமை) லிஸ் ட்ரஸ் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, முத்தமிடுதல் என்று அழைக்கப்படும் மோதிர விழா முடிந்துவிட்டதால், ட்ரஸ் டவுனிங் வீதிக்குத் திரும்பி தனது அமைச்சரவையைக் கூட்டத் தொடங்குவார்.
எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பிற்கு முன்னதாக, உள்துறை செயலாளர் பிரிதி படேல் மற்றும் கலாச்சார செயலாளர் நாடின் டோரிஸ் உட்பட பல பிரபலமான நபர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
ராணி தனது ஆட்சியில் பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு பால்மோரலில் புதிய பிரதமரை சந்திப்பது இதுவே முதல் முறை. 96 வயதான ராணியின் உடல்நிலை குறித்த கவலைகளால் இந்த மாற்றம் ஏற்பட்டது.
ஆனால், அவரது உடல்நிலை கவலைகள் இருந்தபோதிலும், ராணி தனது மிக முக்கியமான அரசியலமைப்பு கடமைகளில் ஒன்றை இன்னும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
ராணியின் பிரதமர்களில் 12 பேர் ஆண்கள். ட்ரஸ் மூன்றாவது பெண். பதினொருவர் பழமைவாதிகள். வில்சன், காலகன், பிளேயர் மற்றும் பிரவுன் ஆகிய நால்வர் மட்டுமே தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக பொரிஸ் ஜோன்சன் தனது பிரதமர் பதவியை ராணி முன்னிலையில், இராஜினாமா செய்துக்கொண்டார். அதற்கான இராஜினாமா கடிதத்தை ராணியிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.