தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் எரிபொருளைப் பெறும்போது உருவாக்கப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு இணைக்கப்படவுள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) பதிவிட்டுள்ளார்.
தேசிய எரிபொருள் பாஸை (QR) சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அடையாளம் காணப்பட்ட சில விசேட பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விஷேட பிரிவினர்கள் தனியார் மற்றும் பொதுத்துறையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச்சீட்டு அறிமுகம் மற்றும் வாகனம் அல்லாத பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு அறிமுகம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.