இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து நியூசிலாந்தில் எதிர்வரும் 26ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளார்.
மேலும் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி லண்டனுக்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.