எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச கொள்முதல் ஆகியவற்றில் உலக வங்கியின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து லிட்ரோ நிவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனம் முழு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதாகவும் உலக வங்கியின் மேற்பார்வையின் கீழ் மற்றும் அமைச்சர்களின் மேற்பார்வையின் கீழ் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே, பணம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக வெளியான செய்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.