2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தால், கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இன்னும் அதிகாரம் இல்லை என்றும் மார்ச் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனினும் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதனை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.