குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரயிலுக்குள் சென்று ஆய்வு நடத்திய பிரதமர், அகமதாபாத் வரை வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தார்.
அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தலைமுறைக்கான 400 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாட்டின் 3ஆவது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.