இலங்கை மத்திய வங்கி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்த வகையில் அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது.
எனினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம் இல்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369 ரூபாய் 91 சதமாக உள்ளமை குறிப்பிடதக்கது.