சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளை இதன்போது விமர்சித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் கடுமையாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு இதன்போது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித பதிலும் தெரிவிக்காமல் வழமையான மௌன கொள்கையை கடைப்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.