வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 67 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ் மாவட்டத்தின் மல்லாகம் பகுதியில் இடம்பெற்றது.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 67 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கிராம மக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இப் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.