பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாமென தகவல் வெளியாகியுள்ளது.
கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும் தற்போது அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கானின் ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கி பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்றதாக கூறப்படுகிறது.