அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போதே, 2ஆம் திகதி எதிர்ப்பில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.