மூன்று அவுஸ்ரேலிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகள் 24 மணி நேரத்தில் சராசரியாக ஒக்டோபர் மழையை நான்கு மடங்கு வரை மழையை பெற்றுள்ளன.
இந்த கனமழையால் குறைந்தது 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காணாமல் போயுள்ளார். இந்த ஆண்டு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் வீதிகளை மூழ்கடித்துள்ளது. பாடசாலைகளை கட்டாயமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது மற்றும் 3,000 வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியா, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகர் மெல்பேர்னில் உள்ள சில மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.