ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த சபையின் உறுப்பினர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள், தமிழ் கட்சிகள் மற்றும் நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நல்லிணக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.