நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
காணொளி வாயிலாக பிரதமர் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு, பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளின் பணிகளில் சேருவார்கள் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி நாடு முழுவதும் இருந்து தேர்வாகும் இளைஞர்கள் அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகளின் பணிகளில் சேருவார்கள். ஏற்கனவே பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட பணி இடத்தை நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார்.
யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆட்சேர்ப்பு சபை போன்றவை மூலம் தேர்வுகள் நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.