இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரபல அவுஸ்ரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மார்க் பிளாக்னியால் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
3 மாதங்களில் பின்னர் அவர் இலங்கை அணிக்காக மீண்டும் விளையாடுவார் என தாம் நம்புவதாக சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மார்க் பிளாக்னியால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
துஷ்மந்த சமீரவுக்கு கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அவருக்கு ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக, முன்னர் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.
இதற்கமைய அவருக்கு தற்போது, அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.