நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் ஆபத்தான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கண்டி மாவட்டத்தின் கங்காவத்தை கோரல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்கள் மண்சரிவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாf தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.