நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளதுடன், நாட்டின் தற்போதைய நிலை தொடர்பிலான விவாதமும் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான பிரேரணை தேசிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.