2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOEs) தனியார்மயமாக்குவதற்கான முக்கிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளார்.
இது முதன்மையாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வரவு செலவுத் திட்டமென தெரிவிக்கப்படுகிறது.
தனியார் துறையின் பங்களிப்புடன் அபிவிருத்திக்காக சுமார் 40 அரச நிறுவனங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், சுமார் பத்து நிறுவனங்களை உடனடியாக தனியார்மயமாக்கி அபிவிருத்தி செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவை அடங்கும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.