இந்தியாவில் தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதிக்குள் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரத்தின் அடிப்படையில் திகதி இறுதிசெய்யப்படும் என ஐதராபாத்தை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் சந்தனா தெரிவித்துள்ளார்.
3 வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் விக்ரம்-எஸ் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது.
விக்ரம் சாராபாய் நினைவாக இந்த ராக்கெட்டிற்கு விக்ரம்-எஸ் என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.