அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர், பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
கலிபோர்னியாவின் 27வது காங்கிரஸ் மாவட்டத்தில் குடியரசுக் கட்சியின் மைக் கார்சியாவை வெற்றி பெற்றதாக அறிவித்தது.
இடைக்காலத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, காங்கிரஸின் கீழ் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களை குடியரசுக் கட்சியினர் பெற்றுள்ளனர்
குடியரசுக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர் கெவின் மெக்கார்த்தியை தனது கட்சி, பரிந்துரைத்த பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய காங்கிரஸ் கூடும் போது அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக அவர் வருவார்.
2019ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசிக்குப் பதிலாக அவர் பதவியேற்பார்.
இந்த வெற்றியின் மூலம் ஜனாதிபதி ஜோ பைடனின் நிகழ்ச்சி நிரலை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குடியரசு கட்சினரால் முடக்க முடியும்.
ஆனால், ஜனவரி மாதம் புதிய காங்கிரஸ் கூடும் போது ஜனநாயகக் கட்சியினர் செனட்டின் கட்டுப்பாட்டை வைத்திருப்பார்கள்.