ரஷ்யாவின் அண்மைய ஏவுகணைத் தாக்குதல்களை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் பயங்கரவாத சூத்திரம், மில்லியன் கணக்கான மக்களை எரிசக்தி விநியோகம் இல்லாமல், வெப்பமடையாமல், தண்ணீர் இல்லாமல் இருக்க கட்டாயப்படுத்தியுள்ளது என ஐ.நா பாதுகாப்பு சபையில் காணொளி மூலம் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனிடையே, ரஷ்யாவின் அண்மைய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக, உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும், அணுமின் நிலையங்கள் செயலிழந்தன.
இன்னும் உக்ரைனிய கட்டுப்பாட்டில் உள்ள மூன்று ஆலைகள் செயலிழந்துள்ளன மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரிய சபோரிஸியா ஆலை அதன் குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை இயக்க டீசல் மின்பிறப்பாக்கிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமை, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஸியா ஆலை குறித்து பெரும் கவலையை வெளியிட்டது. இது மீண்டும் மீண்டும் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அண்டை நாடான மால்டோவாவும் நேற்று (புதன்கிழமை) பெரும் மின்தடையை சந்தித்தது, ஆனால் நேரடியாக பாதிக்கப்படவில்லை.
குளிர்காலம் தொடங்குவதால், ரஷ்யாவின் உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. மின் நிலையங்கள் மீது ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் பெரிய சேதத்தை ஏற்படுத்தியதாகவும், நாட்டின் பாதிக்கு மேல் பழுதுபார்க்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.