கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழுநிலைப் போட்டிகளில், ஈரான் மற்றும் செனகல் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
அஹமட் பின் அலி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், ஈரான் மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின.
குழு பி பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், ஈரான் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில், ஈரான் அணி சார்பில், மேலதிக நேரத்தில் ரூஸ்பே செஷ்மி 98ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ராமின் ரெசையன் 101ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
அல் துமானா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், கட்டார் அணியும் செனகல் அணியும் மோதின.
குழு ஏ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், செனகல் அணி, 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. தோல்வியை தழுவிய தொடரை நடத்தும் கட்டார் அணி, தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது.
செனகல் அணி சார்பில், பவுலே தியா 41ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஃபமாரா டைட் ஹியூ 48ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், பம்பா டைன்ங் 84ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
கட்டார் அணி சார்பில், மொஹமட் முன்டாரி போட்டியின் 78ஆவது நிமிடத்தில் அணிக்காக கோலொன்றை பெற்றுக்கொடுத்தார்.
கலீபா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின.
குழு ஏ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியானது, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதில் நெதர்லாந்து அணி சார்பில், கொடி காக்போ 6ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஈக்வடார் அணி அணி சார்பில், என்னர் வெலன்ஸியா போட்டியின் 49ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இலங்கை நேரப்படி இன்று அல் பெய்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மோதின.
குழு பி பிரிவில் நடைபெற்ற இப்போட்டியானது, எவ்வித கோலுமின்றி சமநிலையில் முடிவடைந்து.