நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யும் 16 சட்டமூலங்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
குறித்த 16 சட்டமூலங்களும் மாநில அரசாங்கங்களின் உரிமைககளில் குறுக்கிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் தமது கட்சியின் நாடாளுடன் 16 புதிய சட்டமூலங்கள் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசாங்கம் அவசரமாக சட்டமூலங்களை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.