ஜோ பைடன் நிர்வாகம் கடந்த ஜூலையில் கைதிகள் பரிமாற்றத்தை முன்மொழிந்த பிறகு, அமெரிக்காவும் ரஷ்யாவும் கைதிகளை பறிமாறிக்கொண்டுள்ளன.
12 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ஆயுத வியாபாரி விக்டர் போட்டுக்கு பதிலாக, சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரிட்னி கிரைனரை ரஷ்யா விடுவித்துள்ளது.
க்ரைனர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வீட்டிற்கு ஒரு விமானத்தில் சென்றதாகவும் ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.
‘பிரிட்னி நல்ல மனநிலையில் இருக்கிறார் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் குணமடைய நேரமும் இடமும் தேவை’ என்று அவர் மேலும் கூறினார்.
‘மரணத்தின் வணிகர்’ என்று பரவலாக அறியப்படும், பிரபல ஆயுத வியாபாரி விக்டர் போட், மீண்டும் மாஸ்கோவிற்கு வந்துவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போட் தனது தாயையும் அவரது மனைவியையும் தழுவுவதற்கு முன்பு பூச்செண்டை ஏந்தி விமானப் படிகளில் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.
க்ரைனர் பெப்ரவரியில் மாஸ்கோ விமான நிலையத்தில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு கடந்த மாதம் தண்டனை காலனிக்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.