ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைமையகத்தை உக்ரைன் படைகள் தாக்கியதாக கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் ஆளுனர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார்.
லுஹான்ஸ்க், கதிவ்காவில் வாக்னர் குழு சந்தித்த ஹோட்டல் பெரும் பாதிப்பை அடைந்துள்ளதாக, ஆளுனர் கூறினார். ஆனால், ஹோட்டலில் வாக்னர் குழு இருந்ததை உறுதிப்படுத்தப்படவில்லை.
கதிவ்கா தாக்குதலின் போது, ரஷ்யா குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்ததாகவும், மருத்துவ சிகிச்சையின் பற்றாக்குறையால் உயிர் பிழைத்திருக்கும் படைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் இறக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, வாக்னர் குழு, ரஷ்யாவின் நலன்களுக்காக செயற்படும் கூலிப்படையாகும்.
வாக்னர் பிரிவுகள் முன்பு கிரிமியா, சிரியா, லிபியா, மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் போரில் ஈடுபட்டன.
தெற்கு உக்ரைனில் ஒரு வார இறுதியில் அமைதியின்மையின் மத்தியில், கிழக்கில் உள்ள ஹோட்டல் தாக்கப்பட்டது.