பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில், இதுவரை இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தெற்கில் உள்ள அன்டாஹுய்லாஸ் விமான நிலையத்தில், ஐம்பது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் சூழப்பட்டதையடுத்து, விமான நிலையம் மூடப்பட்டது.
பெருவின் விமானப் போக்குவரத்து அமைப்பான கார்பாக் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பகுதியான அன்டாஹுய்லாஸ் விமான நிலையம், சனிக்கிழமை பிற்பகல் முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,
சனிக்கிழமையன்று அண்டாஹூய்லாஸில் மூவாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்தபட்சம் 16 போராட்டக்காரர்கள் மற்றும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் நகரத்தில் நடந்த அணிவகுப்புகளில் காயமடைந்தனர்
கடந்த வாரம், காங்கிரஸை சட்டவிரோதமாக மூட முயற்சித்ததைத் தொடர்ந்து இடதுசாரித் தலைவர் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே பதவியேற்றுள்ளார்.