யாழ் .மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போதுபிரான்ஸ்,பஹ்ரைன்,வியட்னாம்,ஜேர்மனி,லெபனான்,இஸ்ரேல், எதியோப்பியா,பிலிப்பைன்ஸ், ஜோர்தான், அவுஸ்திரேலியா, ஜக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளுக்கு புதிதாக இலங்கையால் நியமிக்கப்பட்ட தூதுவர் குழுவே இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளது.
குறித்த தூதுவர் குழு வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.