வடக்கு அயர்லாந்தில் கால்நடை மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கான தற்போதைய பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஏற்பாடுகள் நீடிக்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் ஒரு கிரேஸ் பீரியட் (கருணை காலம்) காலாவதியாக இருந்தது.
இதனால் தடுப்பு மருந்து, அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்து உள்ளிட்ட கால்நடை மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எச்சரித்துள்ளது.
இருப்பினும், நேற்று (திங்கட்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் மரோஸ் செஃப்கோவிக், கருணை காலம் 2025ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படுவதை உறுதிப்படுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், வடக்கு அயர்லாந்திற்கும், சைப்ரஸ், அயர்லாந்து மற்றும் மால்டாவிற்கும் கால்நடை மருந்துகளின் தொடர்ச்சியை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று மரோஸ் செஃப்கோவிக் கூறினார்.
இந்த அறிவிப்பு வடக்கு அயர்லாந்தில் உள்ள கால்நடை மருத்துவத் தொழிலுக்கு அதிக தெளிவைக் கொண்டுவருவதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி தெரிவித்தார்.