தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான அமைப்பாகும். தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் அதற்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆரம்ப கட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் செயல்பாட்டில் அரசாங்கம் தலையிடாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.