மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி க.கலாரஞ்சினி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மூச்சு வேலைத்திட்டத்திட்டத்தின் ஊடாக சுமார் 40இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,முன்னாள் அமைச்சர்களான அமீர்அலி,கணேசமூர்த்தி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.