கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் நாடெங்கிலும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த நிலையில் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பாடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததோடு வானவேடிக்கைகளும் நகரை வண்ணமயமாக்கியிருந்து.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான மூவின மக்களும் ஒன்றுகூடி இந்த புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.