அணு ஆயுதங்களின் உற்பதியை வேகமாக அதிகரிக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எதிர்கொள்ள ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையிலிருந்து ஒரு குறுகிய தூர ஏவுகணையை சோதனை செய்த சில மணிநேரங்களுக்கு பின்னர் கிம் ஜொங் உன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
வட கொரியாவை தனிமைப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் வொஷிங்டனும் சியோலும் ஒரு சதித்திட்டத்தை மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகவே இராணுவ சக்தியை இரட்டிப்பாக்கவும் அமெரிக்கா மற்றும் பிற சக்திகளின் ஆபத்தான இராணுவ நகர்வுகளை சமாளிக்க தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை வடகொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை விரைவில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கிம் கூறியதாக கூறப்படுகிறது.