இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்களிலிருந்து நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் விலகியுள்ளார்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 16 நாட்களில் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதால் அதற்குச் சரியான முறையில் தயாராகவில்லை எனக் கூறி இரு ஒருநாள் தொடர்களில் இருந்தும் மில்ன் விலகியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு பதில் வீரராக நியூஸிலாந்து அணியில் பிளைர் டிக்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
தற்போது பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நியூஸிலாந்து அணி, அடுத்ததாக ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக இந்தியாவுக்கு செல்லும் நியூஸிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.