2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் திகதி வெளியாகியுள்ளது.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற வரவுசெலவு திட்ட கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவுசெலவு திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
வரவுசெலவு திட்ட கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.