இந்தியாவில் இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இதற்தகமைய, 2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களிலும், பின்னர் கர்நாடகாவிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.
அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டின் பிற்பாதியில் மிசோரம், சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
அத்துடன், காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பத்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என கருதப்படுகிறது.