நூறு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவும் ஜப்பானும் இன்று(வியாழக்கிழமை) பாதுகாப்பு தொடர்பான விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கையெழுத்திடவுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.