ஓமானில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓமானில் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மஹவ, தலதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.