கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதியளித்துள்ளார்.
கர்நாடகத்தில் இந்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல் வாக்குறுதியை காங்கிரஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இரண்டாவது வாக்குறுதியாக மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.