இலங்கைத் தீவின் தேசங்களுக்கு இடையிலான தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதிக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் காணப்போவதாகக் கூறுகின்றார். தமிழர் தரப்போ எவ்வித முன்னாயத்தமோ ஏகோபித்த கொள்கை இணக்கமோ இன்றி பேச்சுவார்த்தைகளில் இணைந்துள்ளது.
இலங்கை இன்று பாரிய பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ளது. கடந்த எட்டு தசாப்தங்களாக ஏனைய தேசங்களை, குறிப்பாக தமிழ்த்தேசத்தை சிங்களை பௌத்த மேலாதிக்கத்தின் எதிரியாகக் கருதி சிறீலங்கா செயற்;பட்டதன் விளைவு இது. இந்த உண்மையை இன்றுவரை சிங்கள தேசத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ. புத்திஜீவிகளோ, அல்லது மக்களோ வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதில்லை.
உண்மையை ஏற்க மறுத்தாலும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலமே தற்போதைய பொருளாதாரக் கையறு நிலையிலிருந்து மீளலாம் என்ற யதார்த்தம் உறைத்ததனாலேயே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசுத்தரப்பால் விடப்படுகின்றன. இதுவே இன்று தமிழர் தரப்புக்கான பலமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை தொடர்பான எமது கரிசனைகளை நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.
1. பேச்சுவார்த்தையின் ஒரு தரப்பாக தமிழ்த்தேசத்தை இனவழிப்பு மூலம் அழித்துவிடவும் அதன் இருப்பையும் அடையாளங்களையும் அழிப்பதற்கும் இலங்கையர் என்ற செயற்கையான ஒற்றைத் தேசியத்தினுள் அனைவரது அடையாளங்களையும் கரைத்துவிடுவதற்காக செயற்படுகின்ற சிங்கள தேசமும் மறு தரப்பாக இத்தீவின் வடக்கு-கிழக்கைத் தமது மரபுவழித் தாயகமாகக் கொண்டு, அரசியல் கோட்பாட்டினடிப்படையில் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்துகின்ற, அந்த அடையாளத்தை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான போராட்டங்களையும் வீரமும் தியாகங்களும் நிறைந்த விடுதலைப் போரையும் நடாத்திய, எப்போதும் தேர்தல்களில் அதற்கான ஆணைகளை மீள மீள வழங்கி வருகின்ற தமிழ்த் தேசமும் உள்ளன.
2. எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் எந்தத் தரப்புக்கும் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படையான விடயங்கள் என சில இருக்கும். இனவழிப்பை எதிர்கொள்கின்ற தமிழ்த்தேசத்திற்கு எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாதவை அவர்களின் தேசிய இருப்புக்கான பாதுகாப்பும் தேசிய அடையாளங்களுக்கான பாதுகாப்புமாகும்.
இத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த உத்தரவாதங்களைத் தருவதாகவே எப்போதும் இருக்க வேண்டும். இத்தீவின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் இலங்கை அரசு தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டது.
இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் காலத்தை இழுத்தடிப்பதற்கும், தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதற்கும் அரைகுறைத்தீர்வுகளை திணிப்பதற்கான முயற்சிகளுக்கும், ஈற்றில் பயனற்ற பேச்சுவார்த்தைகளிலிருந்து தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டு வெளியேறும்போது தமிழர்கள் தீர்வுக்குத் தயாரில்லை என்ற பொய்யை உருவாக்குவதற்காகவுமே இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் மறக்கக் கூடாது.
3. முதலில், பேச்சுவார்த்தைகளுக்கான தெளிவான வழிவரைபடம் ஒன்றை இருதரப்புகளும் இணைந்து தயாரிக்க வேண்டும். இது, பிரதானமாக முக்கிய அடைவுகள், அவற்றுக்கான நேர அட்டவணை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
4. பேச்சுவார்த்தைகள், இனவழிப்பின் விளைவுகளாக தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள், இறுதி அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் என இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும்.
5. அன்றாடப்பிரச்சினைகளுக்கான தளத்தில் பின்வருவனவற்றை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பேசப்பட வேண்டும்.
5.1. தமிழர் தாயகத்தில் நடைபெறும் சகல நில அபகரிப்புகளையும் நிறுத்துதலும் காணிகளை மீள வழங்கலும்
5.2. தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையிலான அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடன் நிறுத்துதல்
5.3. சிறைகளிலுள்ள சகல தமிழ் அரசியற் கைதிகளையும் நிபந்தனையற்று விடுவித்தல்
5.4. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணைகளை ஆரம்பித்தல்
5.5. தமிழ்ப்பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான எல்லை மறுசீரமைப்புகளை மீளப்பெறல்
5.6. தமிழர் தாயத்தின் குடிப்பரம்பலை மாற்றி அமைப்பதற்காக சுதந்திரத்திற்கு முன்பான பொறுப்பாட்சிக் காலத்திலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்டுவருகின்ற குடியேற்றங்களுட்பட அனைத்தையும் நிறுத்துதலும் அகற்றுதலும்
5.7. இராணுவமயமாக்க நீக்கம். உதாரணமாக, தமிழர் தாயகத்தை பெருமெடுப்பில் ஆக்கிரமித்து, தமிழர்களின் வாழ்வின் சகல அம்சங்களிலும், முன்பள்ளிகளுட்பட தமிழர்தாயகத்தின் சிவில் நிர்வாக செயற்பாடுகளிலும் இலங்கையின் முப்படைகளும் செய்துகொண்டிருக்கும் அனைத்துத் தலையீடுகளையும் முழுமையாக நிறுத்துதல், அவர்களை முகாம்களுக்குள் முடக்குதல் மற்றும் அளவையும் குறைத்தல்
5.8. தமிழர்கள், தமக்காக போராடி உயிர் நீத்தவர்களையும் இனவழிப்பின்போது இறந்த தமது உறவுகளையும் நினைவு கூர்வதற்கான உரிமையை தடுக்காது இருத்தல், இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் உட்பட தமிழர் சார்பான சகல நினைவுச்சின்னங்களையும் விடுவித்தல், மீள அமைப்பதற்கான தடைகளை நீக்குதல்
5.9. ஈழத்தமிழர்களின் கோரிக்கையான, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணைகளை முன்னர் ஒப்புக்கொண்டபடி ஆரம்பிக்க அனுமதித்தல்
5.10. இறுதி அரசியல் தீர்வு எட்டப்படும் வரை தமிழர்கள் தமது தாயகத்தின் அன்றாட அலுவல்களை நடாத்துவதற்காக இடைக்கால நிர்வாகப் பொறிமுறை ஒன்றை அமைத்தல்
இந்தப் பேச்சுவார்த்தைத் தளத்தில், இவற்றை அமுல்படுத்துவதற்கான கால அட்டவணைகள் பற்றி பேசப்பட வேண்டும். குறுகிய காலத்தில் இவற்றை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை மூலம் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தனது உறுதியையும் நேர்மையையும் தமிழ் மக்களுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்த முடியும்.
6. இரண்டாவது தளத்தில் இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கான இறுதி அரசியற் தீர்வு நோக்கிப் பேசப்பட வேண்டும். இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காத்திரமானவையாக இருப்பதாயின் அவை இலங்கையின் தற்போதைய ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அப்பாலான தீர்வை நோக்கியதாக, ஆரம்பத்திலிருந்து இருக்க வேண்டும்.
13ம் திருத்தத்தைப்பற்றி பேசுவது, அதன் ‘பிளஸ்’ பற்றி பேசுவது, ‘மேலவை’ பற்றிப் பேசுவது என்று ஒற்றையாட்சி அரசியல் யாப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தைக் கடத்தாது நேரடியாகவே தமிழர்களது அபிலாசைகளான பிரிக்க முடியாத தாயகம், தேசியம், தன்னாட்சி, இறைமை என்பவற்றைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அரசியற் தீர்வின் அடிப்படைகளாக வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவு என்பவற்றின் உள்ளடக்கங்கள் அமைய வேண்டும்.
7. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
8. தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டும் தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது என்பது கனதியான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் சிறீ லங்காவின் இராஜதந்திர சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் போதுமானது அல்ல.
தமிழர்கள் பேச்சுவார்ததைகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஆராசனைகள் வழங்குவதற்காக தமக்கென பல்துறைசார் மதியுரைஞர் குழுக்களை (அரசியல் யாப்பு நிபுணர்கள், காணி அபகரிப்புகள் மற்றும் காணிச்சட்டங்கள் தொடர்பான அறிவுடையோர், அரசியல் அறிஞர்கள், பொருளாதார அறிஞர்கள், பல்வேறு துறைகளில் நிர்வாக அனுபவமுடையவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பிராந்திய விடயங்களில் பரீட்சயமுடையவர்கள் என) உருவாக்க வேண்டும். அவர்களைத் தகுந்த சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளில் பொருத்தமான வகையில் இணைத்துக்கொள்வதுடன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
9. இலங்கை அரசுடன் தமிழ் மக்கள் நடாத்தும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் வெளிப்படைத் தன்மையுடன் நடாத்தப்பட வேண்டும். தமிழர் தரப்பு சார்பாக பங்கேற்பவர்கள், பேச்சுவார்த்தை பற்றியும் தீர்வுத் திட்டம் தொடர்பாகவும் தமிழ் மக்களுடன் துணிச்சலான, வெளிப்படையான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக நடாத்தி, இறுதித் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றிய மக்களது அபிப்பிராயங்களை பெற்றுக் கொண்டு அவற்றுக்கு ஏற்பத் தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
10. அதே வேளை, சில விடயங்கள் உரிய காலம்வரை பகிரங்கப்படுத்தபட முடியாதவையாக இருக்கும் என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதனால் உருவாக்கப்படுகின்ற பல்துறைசார் மதியுரைஞர் குழுக்களுடன் அவ்வாறான விடயங்களுட்பட அனைத்து விடயங்களும் உடனுக்குடன் முழுமையாகப் பகிரப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, கலந்துரையாடப்படுவதன்மூலம்; உரிய தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் தமிழ்த்தரப்பினர், தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களின்போதும் பேச்சுவார்த்தையின் இறுதியிலும் பேச்சுவார்த்தை மற்றும் அதன் அடைவுகள் என்பன தொடர்பாக தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறல் வேண்டும்.
11. முன்னைய பேச்சுவார்த்தைகளில் இந்தியாவும் ஏனைய சர்வதேச சக்திகளும் எவ்வாறு நடுநிலையோ, நியாயமோ இன்றி தமிழர்களது நலன்களுக்கு எதிராக நடந்து கொண்டன என்பதை நாம் அறிவோம். ஆனாலும் இந்தப் பேச்சுவார்த்தையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் – குறிப்பாக சிறீ லங்காவை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க முன்வரும் நாடுகள், மத்தியஸ்தம் வகிப்பது நல்லது என்றே நாம் நம்புகின்றோம்.
ஆனால் அவர்களது மத்தியஸ்தம் தொடர்பான விதிமுறைகள் முற்கூட்டியே உருவாக்கப்படல் வேண்டும். மேலும், இந்நாடுகளுடன் உலகில் இருக்கின்ற பிரபல்யமான, மனச்சாட்சியுள்ள, எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கின்ற, நசுக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுக்கின்ற, அழுத்தங்களுக்கு அடிபணியாத தனிநபர்களுள் சிலராவது மத்தியஸ்தர்களாகவும் கருத்துரைக்கும் பார்வையாளர்களாகவும் பேச்சுவார்த்தையில் இணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.
இவை அனைத்துக்கும் மேலாக, புலம் பெயர் தமிழர்களிடமும் ஏனைய சர்வதேச முதலீட்டாளர்களிடமும் பேச்சுவார்த்தையின் விளைவாக தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையிலான இறுதித்தீர்வு எய்தப்பட்டு, அது தமிழ் மக்களின் மத்தியில் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அவர்களால் ஏற்கப்பட்டு, நடைமுறைக்கு வரும்வரையில் இலங்கை பயனுறும் வகையிலான முதலீடுகளையோ அல்லது பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்கும் நோக்கிலான உதவிகளையோ மேற்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
இதேபோல் பேச்சுவார்த்தைகளில் தமிழர்தரப்பாகக் கலந்துகொள்பவர்களும் இதே கோரிக்கையை புலம்பெயர் தமிழர்களிடமும் சர்வதேச முதலீட்டாளர்களிடமும் பேச்சுவார்த்தைக்கு எம்மை வற்புறுத்துகின்ற சக்திகளிடமும் பகிரங்கமாக வலியுறுத்துதல் வேண்டும்.
தற்போது இலங்கையை பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்பதற்கு உதவ முன்வரும் நாடுகளும் அமைப்புகளும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை பொருளாதார உதவிக்கான முன்னிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
பொருளாதார உதவிகளின் ஒவ்வொரு கட்டமும் பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு அடைவுடனும் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும் என்பதை உதவி வழங்குபவர்கள் சிறீ லங்காவுக்கு கூறுவதுடன் அதையே நடைமுறைப்படுத்தவும் வேண்டும். வரலாற்றில் ஏற்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தை உலகம் சரியாகப் பயன்படுத்துவதாயின் சர்வதேச நாடுகளும் உதவி வழங்கும் நிறுவனங்களும் இதையே செய்ய வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
மேலும் தமிழ்த் தேசத்துடன் பேசுவது போலவே இத்தீவில் வாழும் முஸ்லிம்கள் மலையகத் தமிழர்கள் பறங்கியர், மலாயர் போன்ற சமூகங்களுடனும் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடாத்துவதுடன் ஏனைய சமூகங்களுக்கு எதிராக இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள பௌத்த – சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கெதிரான முழுமையான நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நாம் இலங்கை அரசிடம் வலியுறுத்துகின்றோம்.
இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புகள்:
• சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு
• நியு சன் விளையாட்டு கழகம்
• புழுதி – சமூக உரிமைகளுக்கான அமைப்பு
• அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு
• தளம்
• தமிழ் சட்டத்தரணிகள் பேரவை
• யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
• யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
• நீதி சமாதான ஆணைக்குழு, யாழ்ப்பாண மறை மாவட்டம்
• நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள் துறவிகள் – வடக்கு கிழக்கு
• குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம்,
• அடையாளம் – கொள்கை ஆய்வுக்கான நிலையம்
• கிராமிய உழைப்பாளர் சங்கம்
• மறைநதி கத்தோலிக்க தொடர்பூடக மையம், யாழ்ப்பாண மறை மாவட்டம்
• சுயம்பு – கலை பண்பாட்டு செயல்திறன் மையம், யாழ்ப்பாணம்
• P2P மக்கள் இயக்கம்
• தமிழ் சிவில் சமூக அமையம்
• மலையக சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.
• சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.
• சமூக அபிவிருத்திக்கான செயற்பாட்டு மையம்.
• மலையகத் தமிழர் பண்பாட்டுப் பேரவை
• குரலற்றவர்களின் குரல்
• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வடக்கு கிழக்கு
• யாழ் மாவட்ட பெண்கள் சமாசம்
• அக்கினிச் சிறகுகள்
• இலங்கை பல்சமய கருத்தாடல் நிலைய சகவாழ்வு சங்கம், யாழ்ப்பாணம்
• Centre for Accessibility Monitoring Information Disability. Batticaloa
Individuals Signed
1. Thavaththiru Akaththiyar Adikalar Then Kayilai Atheenam
2. Bishop P. F. Immanuel Fernando Bishop, Mannar
3. Bishop Noel Immanuel Bishop, Trincomalee
4. Thavaththiru Velan Swamigal Sivaguru Atheenam
5. Rev, Fr. Selvan Priest, Nallur
6. Rev, Fr. Mohan Ramki Priest
7. Rev. Fr. Jude Sutharsan Priest
8. Rev. Fr. Kanthaiyah Jegathas Priest
9. Rev. Sr. S. Nichola Rev. Sister
10. Rev. Fr P. Y. Jebaratnam Archdeacon, Jaffna Diocese
11. Rev. Fr K. Jeyaratnam Ilavalai
12. Rev. Fr Jeyabalan Croos Mannar Diocese
13. Rev. Fr Augustin Pushparajah Mannar Diocese
14. Rev. Fr Arulanantham Yavis Parish Priest, Gurunagar
15. Rev. Fr Vasanthan Parish Priest, Neduntheevu
16. Rev. Fr Stephan, Jaffna
17. Rev. Fr Rohan Claritan
18. Rev. Fr Ezhil Rajan, Ireland
19. Rev. Fr Leo Armstrong Jaffna Diocese
20. Rev. Fr T. Raviraj Lecturer, St. Saviour Mission
21. Rev. Fr Mangalaraja Lecturer, St. Saviour Mission
22. Rev. Fr A. Justin Lecturer, St. Saviour Mission
23. Rev. Fr Rex Soundara Lawyer
24. Rev. Fr M. V. R. Ravichandran Lecturer, University of Jaffna
25. Rev. Fr Terence Fernando Colombo Diocese
26. Rev. Fr Zerad Jayawardana Colombo Diocese
27. Rev. Fr Nanthan Sabramathu Colombo Diocese
28. N. Abilash Citizen
29. S. Abinaya Civil Activist
30. A. Abiraj Social Being
31. Aingaran Thamilarsan Journalist
32. S. Ajitha Civil Activist
33. Ajithkumar Sports Club
34. Ambika Rajasegaram Woman Civil Activist
35. Ananthi Woman Civil Activist
36. Angel LGBTQI Activist
37. K. Anitha Preschool Teacher
38. Anitha LGBTQI Activist
39. Annet Nilukshi Christy Lawyer
40. Anojan Civil Activist
41. T. Anpalagan Social Being
42. Anuja Rasanayakam Lawyer
43. Anusaya Civil Activist
44. K. Anusha Woman Civil Activist
45. Anushani Alakaraj Civil Activist
46. Anushanth Civil Activist
47. S. Anushiya Feminist
48. R. Anushiya Woman Civil Activist
49. Appoli Antony Jerad Balenthiran Socially Concerned
50. Ariyaretnam Wifred Arjun Lawyer
51. Ariyathas Saththiyananthy Teacher
52. Arul Vasanthan Civil Activist
53. Arulamma Civil Activist
54. P. Arulthas Social Being
55. Arulthas Civil Activist
56. Arulvathana Feminist
57. Arutpiragasam Niroshan Lawyer
58. Asvika Civil Activist
59. V. Athina Woman Civil Activist
60. P. Athithya Woman Civil Activist
61. Azhakaratnam Keerthana Lawyer
62. P. Babitha Woman Civil Activist
63. Babu Kajenthini Woman Civil Activist
64. Babylila Woman Civil Activist
65. A. Baheerathan Civil Activist
66. S. Bajeena Woman Civil Activist
67. Bala Civil Activist
68. Balabaskaran Sutharsan Lawyer
69. Balasigham Mathushalini University Student
70. Banumathy Aravinthan Woman Civil Activist
71. M. Banusha Woman Civil Activist
72. M. Barath Civil Activist
73. A. Basna Civil Activist
74. S. Bavanatharajah Bank Manager
75. S. Beeshman Civil Activist
76. Birunthan Civil Activist
77. Bisliya Puhudo Human Rights Activist
78. Carolene Civil Activist
79. Chanthira Woman Civil Activist
80. C. Chanthirakumar Consultant and Trainer
81. K. Chanthiravathani Woman Civil Activist
82. Chithra Teacher
83. Chithra Mohan Woman Civil Activist
84. Chithra Vijayakumar Woman Civil Activist
85. Chithravel Ganeshan Teacher
86. Chithravel Thayaparan Principal
87. Christene Jeyaseelan Augusta Lima Citizen
88. M. Crasien Lawyer
89. S. Daisy Woman Civil Activist
90. U. M. Dayalini Woman Civil Activist
91. D. J. Deuk Lawyer
92. Dibina Woman Civil Activist
93. D. Dilakshan Student
94. Dilan Citizen
95. A. Dinesh Civil Activist
96. Dinoya Civil Activist
97. Elson Primananth Jesuthasan Civil Activist
98. Eswary Selvakumar Woman Civil Activist
99. S. Eyilos Deenkumar Driver
100. M. Fatima Barna Feminist
101. K. T. Ganehsalingam Department of Political Science
102. K. Ganeshawaran Lawyer
103. Prof N. Gangatharan Faculty of Commerce & Management
104. Gnaneswararasa Nirojan Student
105. Gobi Member, Women Society
106. Gobitha Manokaran Lawyer
107. M. Gopikaran Finance Employee
108. Gowri Woman Civil Activist
109. Gowri Jeyasuntharam Woman Civil Activist
110. Gunathsa Prashanth Civil Society Activist
111. Hakeem Aswar Activist
112. T. Ilakkiya Woman Civil Activist
113. Ilamuruganathan Keshihan University Student
114. Ilayathamby Puvaneswary Citizen
115. Ilayathamby Thirugnanasuntharam Entrepreneur
116. S. Inparuban Civil Activist
117. K. Inthirani Feminist
118. Ismail Aysha Banu Citizen
119. M. Jamuna Woman Civil Activist
120. K. Janaki Woman Civil Activist
121. S. Janarthanan Civil Activist
122. M. M. Jansila Woman Civil Activist
123. Y. Jathusan Student
124. Rev. Fr. Jegathas Citizen
125. P. Jegatheeswaran Citizen
126. K. Jekka Woman Civil Activist
127. Jemika Ponnuthurai University Student
128. K. Jenitha Woman Civil Activist
129. J. Jestin Woman Civil Activist
130. A. Jeyabal Development Officer
131. Jeyaludsumi Jeganathan Woman Civil Activist
132. Jeyam Suthan Student
133. Jeyamathi Thanraj University Student
134. S. Jeyantha Woman Civil Activist
135. Jeyantha Suresh Citizen
136. P. Jeyanthi Woman Civil Activist
137. Jeyanthi Suntharaji Woman Civil Activist
138. Jeyanthini Woman Civil Activist
139. Jeyaram Ketheeswaran Enterpreneur
140. Jeyaratnam Kirushanth Freelance Civil Activist
141. Jeyashangar Mathur Woman Civil Activist
142. Jeyasingam Jeyaruban Lawyer
143. R. Jeyasutha Woman Civil Activist
144. S. Jeyavathani Woman Civil Activist
145. S. Jeyitha Woman Civil Activist
146. Jona LGBTQI Activist
147. S. A. Jothilingam Political Analyst
148. Jude Socially Concerned
149. M. Jude Dinesh Lawyer
150. A. Juliet Feminist
151. Justin Civil Society Activist
152. A. Kabilan Student
153. Kailayaperumal Kamsajini Student
154. Kajan Electrician
155. P. Kajenthiran Entrepreneur
156. Kalaichchelvi Citizen
157. K. Kalaivani Civil Activist, Feminist
158. R. Kalaiventhan Civil Society Activist
159. K. Kalaiyamuthan Social Being
160. Kalatharsini George Washington Citizen
161. S. Kalavathy Member, Jaffna Women Consortium
162. Kalosiyan Prashanthi Socially Concerned
163. Kalpana Woman Civil Activist
164. S. Kamakanthan Civil Activist
165. K. Kamalathevy Woman Civil Activist
166. S. Kamaventhini Civil Activist, Feminist
167. S. Kamsa Woman Civil Activist
168. Kanagasabai Thevakadadcham Retired Grama Niladhari
169. Kanakaraj Sasirekha Lawyer
170. Kanapathippillai Kumanan Journalist
171. K. Kandeepan Civil Society Activist
172. S. Kanjana Woman Civil Activist
173. Kanthaiyah Thavarajah Lawyer
174. Kanthasami Jeyaseelan Citizen
175. Kanthsamy Jeishankar Public Health Inspector
176. Karthi LGBTQI Activist
177. Karthi Kayan Journalist
178. Karthika Civil Activist
179. Karthika Suventhiranathan Citizen
180. K. Karthini Woman Civil Activist
181. Karunya Civil Activist
182. T. Kasenthiran Human Rights Activist
183. Kavitha Woman Civil Activist
184. Kavitha Kanthan Woman Civil Activist
185. K. Kavivaran Student
186. Keetha Woman Civil Activist
187. V. Kesavan Civil Society Activist
188. S. Kesavan Citizen
189. Keshikan Ilamuruganathan Civil Activist
190. A. Kesika Woman Civil Activist
191. Ketheeswaran Enterpreneur
192. Kethika Civil Society Activist
193. Kirubakary Woman Civil Activist
194. Kobalsingam Kovooran Sales Rep
195. M. Komahan Civil Society Activist
196. K. Komavathy Woman Civil Activist
197. Konamalai Mathanagopi Farmer
198. S. Koneshalingam Farmer
199. M. Kovalan Citizen
200. S. Kowsala Civil Activist, Feminist
201. Kowsi LGBTQI Activist
202. A. Koyalili Woman Civil Activist
203. T. Krishanth Citizen
204. Krishna Manimaran Woman Civil Activist
205. K. Kulagowri Civil Activist, Feminist
206. K. Kulamany Woman Civil Activist
207. Kulanthaivel Jekaneethan Nursing Officer
208. Kumanan Kanapathipplillai Citizen
209. Kumar Civil Society Activist
210. V. Kumarasamy Writer
211. S. Kumaravel Medical Officer
212. Kuvethan Development Officer, Divisional Secretariat
213. P. Lakshman Consultant Cardiologist
214. Lakshni Thevathas Lawyer
215. Lakshumi Vasanthan Woman Civil Activist
216. Lalitha Civil Society Activist
217. R. Lalitharani Civil Activist, Feminist
218. Latha Subramaniam Woman Civil Activist
219. Lavanya Thurairatnam Citizen
220. S. Ledchumirani Woman Civil Activist
221. Lingrasa Thinesh Bank employee
222. Lokenthirarasa Jasu Lawyer
223. Mahalakshmi Kurushanthan Woman Civil Activist
224. M. Makenthiran Retired Principal
225. Makenthiran Nirmala Woman Civil Activist
226. R. Makizhini Woman Civil Activist
227. M. Malini Woman Civil Activist
228. K. Mallika Civil Activist, Feminist
229. Mamangam Jeevaraj Nursing Officer
230. Manju LGBTQI Activist
231. S. Manjuladevi Woman Civil Activist
232. A. Mankai Woman Civil Activist
233. Manoj Civil Activist
234. Manoj Prabahar Socially Concerned
235. Mariyampillai Selvin Iraneus Civil Activist
236. S. Mariyarosary Woman Civil Activist
237. S. Mariyarosy Civil Activist, Feminist
238. Mariyathas Ariyathas In Service Advisor
239. Marlyn Venuja Joseph Enosan Citizen
240. Mathan Civil Society Activist
241. K. Mathavi Woman Civil Activist
242. N. Mathivathan Lawyer
243. N. Mathivathani Civil Activist, Feminist
244. K. Mathurika Woman Civil Activist
245. Mayilarasy Woman Civil Activist
246. Mayilvaganam Thibakaran Entrepreneur
247. Mekarasa Thivyanathan Teacher
248. Menaka Woman Civil Activist
249. Mithunraj Civil Activist
250. N. Mohan Lawyer
251. Mohan Civil Society Activist
252. Muruguppillai Kirubaharan Public Health Inspector
253. Muruguppillai Thavayogarajah Development Officer
254. Muthulingam Jananan Public Health Field Officer
255. Muthulingam Pulentirakumar Supervising Public Health Inspector
256. M. Mythili Woman Civil Activist
257. Nadarajah Krishnamoorthy Administrator Assistant
258. Nadarajah Sivaranjith Lawyer
259. Nagaiah Civil Society Activist
260. Nagalingam Pushparaj Nursing Officer
261. Nagaraj Kubenthiran Citizen
262. P. Nalina Civil Activist, Feminist
263. S. Nalini Woman Civil Activist
264. Nallathamby Pushparajah Citizen
265. Nalliah Vinothan Development Officer
266. Nanthini Civil Society Activist
267. Narchchikan Civil Society Activist
268. Navalakshan Student
269. N. Navapremavani Volunteer, Sirakukal Amaiyam
270. Navaratnam Kamalthasan Lawyer
271. Navaratnam Nantharuban Engineer
272. Navaratnam Thamiliniyan Lawyer
273. V. Naveen Social Being
274. S. Nikala Civil Activist
275. Nilanthan Columnist
276. V. S. Niranjan Lawyer
277. Niranjini Counsellor
278. M. Nirmala Woman Civil Activist
279. Nirmalan Video Editor
280. Nirojan Civil Society Activist
281. V. Nirojini Woman Civil Activist
282. K. Niruban Civil Activist
283. Nisha LGBTQI Activist
284. R. Nisha Woman Civil Activist
285. Nishanthan Civil Activist
286. S. G. Nishanthini Citizen
287. S. Nishanthy Bramothya Citizen
288. A. Niththiyah Woman Civil Activist
289. J. Niththiyakala Woman Civil Activist
290. Nithusha Children’s Club
291. Palipody Uthaykumar Principal
292. Parameswary Thiyakam Woman Civil Activist
293. Parvathy Marimuththu Woman Civil Activist
294. Pathinathan Mariya Sulojan Lawyer
295. Pathinatthar Anton Punithanayagam Lawyer
296. Pathmanathan News Reader
297. P. Pathmathevy Civil Activist, Feminist
298. Y. M. Patrick Piratheepan Entrepreneur
299. Paul Arul Vanthana Woman Civil Activist
300. A. Paulraj Student
301. S. Pavalvalli Mother of Tamil Political Prisoner
302. D. Pavikaran Student
303. Pearl Tharsha Benjamin Lawyer
304. K. Piratheepan Civil Activist
305. M. Piratheepan Teacher
306. T. Prasantharaj Civil Activist
307. Prathap Civil Activist
308. S. Praveen Insurance Cooperation
309. Preetha Civil Activist
310. Preetha Umapalan Civil Activist
311. Dr S. Premakrishna Consultant Anaesthetist
312. R. Premala Woman Civil Activist
313. P. Premnath Lawyer
314. Priya LGBTQI Activist
315. Priya Teacher
316. A. Priyanka Woman Civil Activist
317. N. Priyasahanujan Civil Activist
318. Pullanayakam Santhirasekaran Civil Activist
319. Punithsuntharam Sivappiriyan Office Assistant
320. Pushpamalar Woman Civil Activist
321. Pushpavalli Veeraiyah Woman Civil Activist
322. V. Puvitharan President Counsel
323. Rachel Sakayanathan Lawyer
324. Ragivan Civil
325. K. Rahini Woman Civil Activist
326. S. Rahunthini Woman Civil Activist
327. Rajan Electrician
328. K. Rajavathy Woman Civil Activist
329. Rajenthiran Atheeshan Civil Activist
330. C. Rajeswaran Human Resource Development Officer
331. R. Rajeswaran Socially Concerned
332. B. N. Raji Woman Civil Activist
333. S. Rajini Woman Civil Activist
334. P. Rajitha Woman Civil Activist
335. Rajkumar Sajinthan Citizen
336. S. Raju Entrepreneur
337. R. Rakini Civil Activist, Feminist
338. R. Rakitha Woman Civil Activist
339. S. Ram Student
340. S. Ramesh Rural Development Officer
341. T. Ramesh Principal
342. Ramya Vijayakumaran Curator, Eastern University
343. Ranganayaki Paramasivam Woman Civil Activist
344. R. Ranipa Woman Civil Activist
345. C. Ranitha Gnanaraj Lawyer
346. K. Ranjini Woman Civil Activist
347. A. Ranjini Woman Civil Activist
348. J. Ranjini Woman Civil Activist
349. Ranjinidevy Woman Civil Activist
350. Rasaiyah Ilangkumaran Lawyer
351. Rasalingam Vickenswaran Activist
352. A. Raththinaleela Woman Civil Activist
353. P. Raththineswary Woman Civil Activist
354. K. S. Ratnavel Lawyer
355. R. Raveendran Maths Teacher
356. Raviraj Ramama Lawyer
357. T. Ravivarman Senior Journalist
358. Reena Woman Civil Activist
359. N. Remon Management Assistant
360. J. Robitha Woman Civil Activist
361. V. Rohan Student
362. S. Romiya Woman Civil Activist
363. Roshani LGBTQI Activist
364. S. Ruba Woman Civil Activist
365. K. Rubathi Woman Civil Activist
366. A. Ruvaniya Woman Civil Activist
367. Sabaratnam Sivayoganthan Citizen
368. Saila Woman Civil Activist
369. M. Saila Woman Civil Activist
370. Saji LGBTQI Activist
371. M. Sangamathi Woman Civil Activist
372. Sangeeth Woman Civil Activist
373. V. Sangeetha Woman Civil Activist
374. Sanjika Thiruchchabesan Teacher
375. Santhathevy Woman Civil Activist
376. K. Santhathevy Civil Activist, Feminist
377. S. Saraswathy Woman Civil Activist
378. Saraswathy Selvaraj Woman Civil Activist
379. Saroja Woman Civil Activist
380. S. Sasikanth Teacher
381. S. Sasikumar Teacher
382. P. Sasiskanth Civil Activist
383. S. Sasitharan Teacher
384. Sathiya Thavachelvan Citizen
385. Seenithamby Jeyakumar Retired Principal
386. Seetharaman Singer
387. Selashta Civil Activist
388. Selinta Civil Activist
389. Selvanayagam Aravinthan / Anathavarnan Civil Activist
390. Selvanayagam Ravishanth Journalist
391. Selvanayakam Krishanth Journalist
392. Selvarasa Civil Activist
393. T. Selvi Civil Activist, Feminist
394. P. Senthikumaran Citizen
395. Shajini Ravichandran Civil Activist
396. R. Shalini Woman Civil Activist
397. Mrs S. Shanmuganathan Retired Government Servant
398. Shanmuganathan Jeyarosman Kethees Citizen
399. A. Sharmila Civil Activist, Feminist
400. M. Sharmila Woman Civil Activist
401. S. Shiyam Civil Activist
402. Shobana Woman Civil Activist
403. P. N. Singham Civil Activist
404. Sinnaththurai Jegan Lawyer
405. Sinnththamby Thirunavan Public Health Inspector, Vakarai
406. Sinthu Woman Civil Activist
407. Sinthuja Socially Concerned
408. P. Sinthuja Woman Civil Activist
409. Sinthuja Makeswaran Civil Activist
410. T. Sinthujan Teacher
411. P. Sinthujan Civil Activist
412. Sivajini Woman Civil Activist
413. S. Sivakajan Law Student, University of Jaffna
414. K. Sivakala Woman Civil Activist
415. S. Sivakanthan Lecturer, Faculty of Arts
416. Sivam Praba Civil Activist
417. K. Sivamangai Civil Activist, Feminist
418. Sivanatharaja Citizen
419. Dr S. Sivansuthan Consultant General Physician
420. T. Sivaruban Civil Activist
421. Sivasangeerththan Civil Activist
422. S. Siyalini Woman Civil Activist
423. N. Siyana Niyas Civil Activist, Feminist
424. T. Sobitha Woman Civil Activist
425. S. Sothinayagam Manager
426. A. Sounthararajah Lawyer
427. A. Sravanabavan Faculty of Commerce & Management
428. Sribalan Jensi Citizen
429. Sridevy Mangalam Woman Civil Activist
430. Srinagaruban Pathujan Citizen
431. Srisaravanabavan Thineshkumar Teacher
432. V. Sritharan Faculty of Commerce & Management
433. T. Suba Woman Civil Activist
434. G. Subethini Civil Activist, Feminist
435. Subramaniam Sureshkumar Teacher
436. S. Suganya Woman Civil Activist
437. L. Sujeevan Software Developer
438. Sujeevan Tharmaretnam Activist, Sirakukal Forum
439. M. Suji Civil Activist
440. Sujith Employee
441. A. Sujithra Civil Activist, Feminist
442. S. Sukilatha Woman Civil Activist
443. S. Sulosana Woman Civil Activist
444. S. Sulosana Woman Civil Activist
445. R. Sumalatha Woman Civil Activist
446. A. Sumathi Woman Civil Activist
447. M. Sumavathi Woman Civil Activist
448. Suntharalingam Nilani Lawyer
449. S. Suresh Teacher
450. Dr K. Sureshkumar Consultant Obstetrician and Gynaecologist
451. S. Sureshkumar Civil Activist
452. Suseela Kathiresan Woman Civil Activist
453. M. Suseenthiran Retired Regional Manager, Peoples Bank
454. R. Sutha LGBTQI Activist
455. Suthakar Civil Activist
456. A. Suthakari Civil Activist, Feminist
457. Suthan Student
458. Suthanthini Civil Activist
459. V. Sutharsini Woman Civil Activist
460. Suveni Civil Activist
461. P. Suventhini Woman Civil Activist
462. Y. Thadchayini Woman Civil Activist
463. Thambipodi Seetha Sri University Student
464. B. N. Thambu Lawyer
465. Thamilini Surenthran Citizen
466. Thamilselvi Vijayaratnam Science Teacher
467. T. Thanaludchumi Woman Civil Activist
468. Thangamalar Woman Civil Activist
469. G. Thangarani Woman Civil Activist
470. Thangavadivel Kajanthini Citizen
471. S. Thanikkumar Lawyer
472. P. Thansiya Woman Civil Activist
473. S. Thanushan Software Engineer
474. Tharmalingam Ganesh Citizen
475. Tharmararethinam Sujeevan Young Activist
476. Tharmini Woman Civil Activist
477. S. Tharsan Student
478. B. Tharsika Woman Civil Activist
479. K. Tharsika Woman Civil Activist
480. Y. Tharsini Woman Civil Activist
481. Tharsini Civil Activist
482. T. Thavanesan Medical Officer
483. S. Thavaraji Woman Civil Activist
484. T. Thavayogan Social Being
485. R. Thaventhini Woman Civil Activist
486. Thayalan Citizen
487. J. Thayalini Woman Civil Activist
488. J. Thayalini Civil Activist, Feminist
489. R. Thayaparan Member, Rural Development Society
490. Thayaparan Rathi Teacher
491. Thedchamamoorthy Gangatharan Lawyer
492. Theivanai Amirthalingam Woman Civil Activist
493. Thenujan Civil Activist
494. Thevy LGBTQI Activist
495. T. Thilakarani Civil Activist, Feminist
496. Thilakavathy Civil Activist
497. S. Thileepan Civil Activist
498. Thiruchelvam Thiruarul Lawyer
499. M. Thisankan Studio
500. Thivakar Civil Activist
501. S. Thivakaran Citizen
502. N. Thivyathevy Woman Civil Activist
503. T. Thiyageswary Woman Civil Activist
504. Thuraisamy Thineswaran Citizen
505. Thushara Civil Activist
506. V. Thushyanthan Student
507. M. Thuvaraka Civil Activist, Feminist
508. Uruththiran Umathasan Lawyer
509. S. Usha Civil Activist, Feminist
510. Vadiveluppillai Sureshkumar Citizen
511. Valluvan Lecturer, Engineering Faculty
512. Vani Simon Citizen
513. R. Vanitha Woman Civil Activist
514. Vanitha Makenthiran Woman Civil Activist
515. P. Vanithamany Civil Activist, Feminist
516. S. Vany Woman Civil Activist
517. Vasanthagowri Civil Activist
518. Vasuki Rajenthira Activist
519. Velautham Kanakasabhai Retired Principal
520. S. Vicky Student
521. Victoria Roy Woman Civil Activist
522. F. X. S. Vijayakumar Lawyer
523. Vijayakumar Mathivathanan Farmer
524. R. Vijayalakshmi Woman Civil Activist
525. Vijayamalar Woman Civil Activist
526. Vijayan Theenathayalan Civil Activist
527. Vijayanathan Menakan University Student
528. R. Vijayavani Civil Activist, Feminist
529. Vijitha Teacher
530. Vijyakumary Kannathasan Woman Civil Activist
531. Vimalraj Civil Activist
532. S. Vinothini Woman Civil Activist
533. A. Vinothini Woman Civil Activist
534. M. Virmakal Civil Activist, Feminist
535. S. Vishalini Civil Activist, Feminist
536. Viswanathan Sanjeev Banker
537. Vithushikka Civil Activist
538. Winslow Human Rights Activist
539. V. Yarlini Woman Civil Activist
540. Yathu LGBTQI Activist
541. Yogalatha Woman Civil Activist
542. Yogalingam Vijitha Citizen
543. Yogananthy Yogarasah Lawyer
544. Yogarasah Nirosan Student
545. S. Yogeswaran Socially Concerned
546. S. A. Yothilingam Director, Social Science Research Centre
547. P. Yugin Anantharaj Lawyer
548. V. Nishanth Lawyer
549. M. Noel Law College Student
550. A. Camillus Journalist
551. Anton Punithanayagam Lawyer