2023-24ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில், நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் எதுவும் இருக்காது என நிதியமைச்சர் சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பத்திரிகை சார்ந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
எனினும், வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பது தொடர்பாக அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
100 பொலிவுரு நகரங்களையும், 27 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை ஏற்படுத்தவும் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.