வியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவி விலகியுள்ளார்.
ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவர் இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் பலர் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், தவறுகளை இழைத்துள்ளதாகவும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.


















