நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு அமைச்சு பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு அமைச்சர்களாக பதவி பிரமானம் செய்து கொள்ளவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 8 பேரில் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.