விசுவமடு பகுதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது
குறித்த போராட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) விஸ்வமடு வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 14 ஆம் திகதி விசுவமடு பகுதியில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் போதைப் பொருளுக்கு அடிமையான கும்பல் ஒன்று வர்த்தக நிலையத்தில் சேதமாக்கப்பட்டமையை கண்டிக்கும் வகையிலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெறக் கூடாது என வலியுறுத்தியும், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தினருக்கும் மகஜர், ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்து.
மேலும் குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.