எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பமாக இருக்கும் கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.