சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதியின் முதல் தவணையை இலங்கை விரைவில் பெற்றுக்கொள்ளும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.