பங்குச் சந்தைகளில் இடம்பெற்ற மோசடி குறித்து அமெரிக்காவின் ஹின்டன்பேர்க் ஆய்வறிக்கையில் வெளியான தகவல் பொய் என அதானி குழுமம் மறுத்துள்ளது.
ஹின்டன்பேர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டால், அதானி குழும நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இதேபோல் உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி பெரும் பின்னடைவை சந்தித்தார் என தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதாக அதானி குழுமம் தற்போது அறிவித்துள்ளது.